Posts

Showing posts from March 28, 2015
TET என்கிற ‘கொல்’கை முடிவு-Dinakaran News தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் முறையாக நடத்தும் போதுஇங்கு மட்டும் வெயிட்டேஜ், இட ஒதுக்கீடு கிடையாது, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை தமிழ அரசு வைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர். வரிசை எண் அடிப்படையில்.... முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத...