நாளை நடக்கிறது முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சலிங் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 789 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் நாளை (28ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடக்க உள்ளது. ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வரிசை எண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படும். காலை 10 மணிக்கு கவுன்சலிங்தொடங்கும். தகுதியுள்ள ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்கு வர வேண்டும். முதலில் மாவட்ட அளவிலான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும். தொடர்ந்து பிற மாவட...
Posts
Showing posts from March 27, 2015