Posts

Showing posts from March 21, 2015
அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள் அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசித் தேதியாகும்.அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அலுவலகங்களும், அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன.இந்தக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக இருக்கும் 178 இணைப் பேராசிரியர் பணியிடங்களையும், 102 பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டியதோடு, 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பேராசிரியர் பணியிடத்துக்கு வி...
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? புதிய தலைமுறை திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது. தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குதகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகின்றது. 2012 ல் இரு முறையும் 2013 அம் ஆண்டு ஒரு முறையும் தேர்வு நடந்தது. தகுதித் தேர...
Image
எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 96 மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியராகுவதற்கு உரிய அனைத்து தகுதிகள் இருந்தும் அரசின் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகான் முறையினால் பாதிக்கப்ப்பட்ட பலரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் மற்றும் மாநிலப்பொருளாளர் அவர்களின் ஆலோசனையின் படி தங்கள் நிலை குறித்து 200க்கும் மேற்பட்டேர் மனு எழதினர் அம்மனுக்கள் உச்சநீதிமன்றம் சென்றடைந்துள்ள. ஒரு ஆசிரியை 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 88மார்க் எடுத்துள்ளார் அப்போது 5சதவீதம் மதிப்பெண் தளர்வு அளித்திருந்தர் அவரது நிலை மாறியிருக்கும்..தற்போது 2013ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மேலும் 7வருட பணிஅனுபவம் பெற்றுள்ளார், 5 வருட சீனியரிட்டியும் பெற்றுள்ளார். இவ்வளவு திறமை இருந்தும் தன் ஆசிரியர் பணி பறிபோனது வெய்ட்டேஜ் என்னும் தவறான அனுகுமுறையால் ஆசிரியர் பணி கிடைக்காமல் போனது என்றும் அடுத்த பணிநியமன...
652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் இப்போது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுப் பட்டியலானது சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகளில் நடைபெற்று வரும் வழக்குகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை ...