Posts

Showing posts from March 20, 2015
652 கணினி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு
பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழக அரசு முடிவு அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்குழு இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான முறையை ரத்து செய்து கடந்த 2.8.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் மட்டுமல்லாமல், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான ஆட்களைக் கண்டறிந்து அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில், எத்தனை பணியிடங்கள் உள்ளன? அதில் சேர்வதற்கான தகுதி என்ன? வயது, வயதில் சலுகை, இடஒதுக்கீடு போன்றவையும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும். இதற்காக தேர்வுக் குழுவை அமைக்கவேண்டும் . அப்பீல் தள்ளுபடி வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பெறப்படும் பட்டியலுடன் விளம்பரங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரரையும் சேர்த்து, ஆட்கள
"பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின்தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் 2009-இன் படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இருந்தபோதும் ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்தவர்களுக்கு இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த பிஎச்.டி. படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சி வழிகாட்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக இருக்க வேண்டும், ஆராய்ச்சிக் கட்டுரை