குரூப் 2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தொகுதியில் ஆயிரத்து 130 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5 ஆயிரத்து 635 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை, சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது. அழைப்புக்கான விவரம் ((Notice of Certificate V...
Posts
Showing posts from March 17, 2015
- Get link
- X
- Other Apps
காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு தமிழக அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்கள் பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 30ம் தேதி, போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, குரூப் - 1, குரூப் - 2 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் வரிசையாக அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன், காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அரசுத் துறை காலிப் பணியிடங்களின் பட்டியலை அனுப்புமாறும், ஆட்கள் தேர்வுக்கான விவரங்களை தரவும், தேர்வாணையம் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடமிருந்து பட்டியல் கிடைத்ததும், ஒவ்வொரு துறைக்கும் போட்டித் தேர்வுகளை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.