Posts

Showing posts from March 5, 2015
ஹரியானாவில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா மற்றும் 3 பேருக்கு வழங்கப்பட்ட தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. ஹரியாணா முதல்வராக சௌதாலா இருந்தபோது, இளநிலை ஆசிரியர் நியமனத்தில் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு கீழ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 50 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள தில்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், அனைவரும் உடனடியாக சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது.
குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல் தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது.சான்றிதழ் சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. 590 பேர்அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும். குரூப்–4 தேர்வுமுடிவு இன்னும் 45 நாட்களில் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.