Posts

Showing posts from March 2, 2015
வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டு பணியை இழந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்; தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்று 2014 ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வெய்ட்டேஜ் என்னும் முறையினாலும் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வினாலும் பாதிக்கப்பட்டு பணிநியமனத்தை இழந்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலப்பொருளாளர் பி.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்; படி உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு மனு எழுதும் நிகழ்ச்சியாக காலை 10மணியளவில் சுமார் 10க்கும மேற்பட்ட ஆசிரியர்கள் மனு அனுப்பினர் மேலும் நூற்றுக்கணக்கானோர் அனுப்பி வருகின்றனர்..... உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள 80 நபர்கள் மட்டுமில்லாமல் தாங்களும் தங்களைப்போன்று ஒவ்வொருவரும் மிகுந்த மனவேதனையும் பணிநியமனமும் பாதிக்கப்பட்டோம் மேலும் இனிவரும் ஆசிரியர் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர் ஆகவே வெய்ட்டேஜின் மீதும் 2013ம் தமிழ்நாடு ஆசிரியர் பணிநியமனங்கள் மீதும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் ப...
வாட்ஸ் அப் வழங்கும் தொலைபேசி அழைப்பு வசதி வாட்ஸ் அப் வழங்கும் தொலைபேசி அழைப்பு வசதி பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, மொபைல் போன்களில் இயங்கும் வாட்ஸ் அப் மூலம், வாய்ஸ் கால் (Voice Call) வழியாக, மற்ற தொலைபேசிகளை அழைத்துப் பேசலாம். இதற்கெனத் தனி கட்டணம் தேவை இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போனில், வாட்ஸ் அப் புரோகிராமின் 2.11.528 பதிப்பு, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் லாலி பாப் பதிப்பு இயங்க வேண்டும். தொடர்ந்து வரும் காலத்தில் மற்ற சிஸ்டங்களுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன் சேவை நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ். டூலைப் பயன்படுத்தாமல், இலவசமாகக் கிடைக்கும் வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தச் சூழ்நிலையில், போன் அழைப்புகளும் இலவசமாகக் கிடைக்கப் பெற்றால், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இன்னும் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
புத்தகங்களே இல்லாத பாடங்களுக்கு போட்டி தேர்வு:கல்வித்துறை 'தமாஷ்:' கலை ஆசிரியர்கள் அதிர்ச்சி அரசுப் பள்ளிகளில், கலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்குபுத்தகங்களே தெரியாமல், பள்ளிக்கல்வித் துறை பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் புத்தகங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொகுப்பூதியம்தமிழக அரசுப் பள்ளி களில், தொகுப்பூதியத்தில், 16,549 கலை ஆசிரியர் பணியாற்றுகின்றனர். ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட, பல்வேறு தொழிற்கல்வி கற்பிக்கும் பணியில், இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்த உள்ளது. இத்தேர்வு எப்போது நடக்கும் என, தெரியாது. எனினும், போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தேடுகின்றனர்: இதில், இடம் பெற்று உள்ள பாட விவரங்கள் குறித்து எந்தப் புத்தகமும், குறிப்பேடும் இல்லாததால், புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என, ஆசிரியர்கள் ஊர் ஊராகத் தேடி வருகின்றனர். பாடத்திட்டத்தை தயாரித்த, பள்ளிக் கல்வித் துறையின் மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆரா...