Posts

Showing posts from February 20, 2015
டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்டி, மாற்றுத்திறனாளிகள் பட்டினிப் போராட்டம் துவங்கி உள்ளனர்.தமிழகம் முழுவதும், வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட, பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 2006 - 2013 வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், மொத்தம், 1,107 பின்னடைவுப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், 405 தேர்வு செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, மீதமுள்ள, 702 இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி.,க்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. இதில், 4,500 மாற்றுத்திறனாளி பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவு ஜூனில் வெளியிடப்பட்டு, 934 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 198 பேர