Posts

Showing posts from February 15, 2015
ஆசிரியர் தகுதித்தேர்வின் ஆசிரியர் பணிநியமனங்கள் குறித்த உண்மை நிலை உச்சநீதிமன்ற வழக்கு: வெய்ட்டேஜுக்கு எதிராக 4குழுவினரும்,முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வுக்கு எட்குராக திருமதி.நளினி சிதம்பரம்,திரு.அஜ்மல்கான் போன்ற 4 வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றம் சென்றனர் . இடைக்கால உத்தரவு: தமிழக அரசின் ஆசிரியர் பணிநியமனங்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு வரும் இறுதிதீர்ப்பின் அடிப்படையிலும் அமையவேண்டும். இதற்கிடையில் பணிநியமனங்கள் நடைபெறக்கூடாதென உத்தரவு பிறப்பித்தது... கானல் நீராகும் 5% மதிப்பெண் தளர்வு: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முந்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப்பட்டது என மதுரை உயர்நீதிமன்றக்கிளை தீர்ப்பளித்தது...மதிப்பெண் தளர்வில் உள்ளே சென்ற 3064 பேரையும் வெளியேற்ற நம் போராளிகள் உச்ச்நீதிமன்றம் சென்றனர் அங்கு அரசுக்கு கடும் நெருக்கடி உள்ளது இருப்பினும் பணியில் இருப்பவர்களை எந்த தொந்திரவும் செய்யக்கூடாதென மதுரைக்கிளை நீதிபதி சொன்னதை அழுத்தமான வாதமாக அரசு எடுத்துக்கொண்டு பணியில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது....மற்றவர்களுக்கு கானல் நீர் தான...
10 ஆயிரம் அரசு ஆசிரியர்கள் பணியிலிருந்து வெளியேறத் திட்டம்: கேள்விக்குறியாகும் கிராமப்புறப் பள்ளிகளின் எதிர்காலம் ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஊதியம் வழங்காததால், 10 ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், அரசுப் பணியில் இருந்து வெளியேறித் தனியார் பள்ளிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குற்றச்சாட்டு:ஆனால், கடந்த 1999க்கு பின் பணிக்குச் சேர்ந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுக்கு மட்டும், ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பல வகைகளில் போராடியும் ஊதியத்தை உயர்த்த அரசு முன் வராததால், புதிதாக பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர் பணியில் இருந்து விலகி, அதிக சம்பளத்தில் தனியார் பள்ளி பணிகளுக்குச் செல்ல திட்ட...