Posts

Showing posts from February 13, 2015
பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?’ ’பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மைபேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன் விபரம்: விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது. வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் நியமனம்: மேலும் 6 பாடங்களுக்கு பிப்ரவரி 25-இல் நேர்முகத் தேர்வு அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் மேலும் 6 பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கு விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உளவியல், சம்ஸ்கிருதம், சமூகவியல், காட்சித் தகவலியல், இந்திய கலாசாரம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே அனுப்பப்படும் எனவும், இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம...