Posts

Showing posts from February 8, 2015
S.I OF POLICE RECRUITMENT NOTIFICATION | காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இந்திய குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 23-ஆம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறும். 984 காலிப் பணியிடங்கள், 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு (காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதார்களைக் கொண்டு நிரப்பப்படும்)
மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம்: பெண்கள் கண்ணீர் ! சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, 'படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது' என்கின்றனர், போலீசார். 'பேஸ்புக்', ட்விட்டர், வாட்ஸப், கூகுள் பிளஸ் என நீளும் சமூக வலைதளங்களின் பட்டியலில், 'இணைந்திருப்பதே பெருமை' என்று, இளம் தலைமுறையினர் பலரும் நினைக்கின்றனர். தகவல் பகிரவும், தொடர்பு கொள்ளவும் பேருதவியாக இருக்கும் சமூக வலை தளங்களால் ஏற்படும் நன்மைகளைப் போலவே, தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன; இதை, பலர் அறிவதில்லை.சமூக வலைதளங்களில், ஒருவருக்கு 100 நண்பர்கள் இருப்பதாக வைத்து கொண்டால், அவர்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும் படங்களும், தகவல்களும், அந்த, 100 நண்பர்களுடைய நண்பர்களாலும் பார்க்கப்படுகின்றன; அவர்களில் ஒருவர், தவறான எண்ணம் கொண்டவராக இருந்தாலும், படங்களை கெட்ட நோக்கத்துடன் பயன்படுத்தி விட முடிகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இன்றி, பெண்கள், தினமு
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாதநிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும். நியமனம்: இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்க