Posts

Showing posts from January 30, 2015
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை இலவசக் கல்விச்சட்டம் அமலான பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் 2014ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. ஆகவே இந்த ஆண்டில் (2015) ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு 10000 காலி பணியடங்கள் நிரப்பப்படும் 2015-2016 ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணிகளுக்கு இந்த ஆண்டு 10000 காலி பணியடங்கள் நிரப்பப்படும் TNPSC. அறிவிப்பு.
BEd & MEd படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்' பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாகஉயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. அங்கீகாரம்: தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தின் செயலர் விஜயகுமார், தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 670 கல்வி நிறுவனங்கள், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ளன.ஆசிரியர் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், நடைமுறைகள் தொடர்பான புதிய விதிகளை, தேசிய கவுன்சில் கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம், 1ம் தேதி, அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. புதிய விதிமுறை: உட்கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பு நிதி உயர்வு தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றுவதாக, 21 நாட்களுக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்க...
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை இன்று வெளியீடு குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஓராண்டுக்கு உரிய ஆண்டு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் தேர்வுக்குரிய விவரங்கள் யாவும் இடம்பெற்றிருக்கும். அதன்படி, 2015-16ம் ஆண்டிற்கான ஓராண்டில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் பல்வேறு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் அறிவிக்கைகள், தேர்வு நடைபெறும் நாட்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள் (உத்தேசமாக), நேர்காணல் மற்றும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய தேர்வு கால அட்டவணை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் சேர்மன் பாலசுப்பிரமணியன் ஓராண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஓ...