இந்த ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
Posts
Showing posts from January 28, 2015
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல் (27.01.2015) மதியம் 3மனிக்குள்ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலைஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலதலைவர் செல்லத்துரை திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்தார்... ஆசிரியர் பணி நியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் என்னும் ஆசிரியர்களின் இரத்தம்குடிக்கும் முறையை எதிர்த்தும், 2014ம்ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பணிநியமனம் செய்யவலியுறுத்தியும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளோம்... 1. இன்று தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தான் பார்த்த தனியார் பள்ளிவேலையையும் இழந்து,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு மரணவாசலின் ஓரத்தில் நிறபதையார்அறிவார்?? 2.என்அருமை ஆசிரியை சகோதரிகள் ஏமாற்றத்தால் திருமணம் தடைபட்டு முதிர்கன்னிகளாக இருக்கும் அவலநிலையையார் அறிவார்??? 3.ஒவ்வொரு சமூக பிரச்சனையும் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றமே முன்வருகிறது ஆனால் பல லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருட்டறையில் புலம்புவது நீதிதேவதை...