29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம் கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்து வருகிறது. பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை.SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்
Posts
Showing posts from January 27, 2015
- Get link
- X
- Other Apps
தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டு ‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 10-ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவள் ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வு எழுதினர். சனிக்கிழமை இத்தேர்வு நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து இத்தேர்வில் பங்கேற்றனர்.சில பள்ளிகளில் வேண்டு மென்றே அன்றைய தினம் பணிக்கு வரச் சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ளனர். வராதவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ‘மெமோ’ வழங்கியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: சில பள்ளிகளில் அரை நாள் மட்டுமே விடுமுறை அளித்தனர். இதனால், தேர்வு முடிந்ததும் அவச
- Get link
- X
- Other Apps
உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார். கலாம் தனது அனுபவங்கள் குறித்து பேசியதாவது: நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலக்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தார்கள். இருப்பது 9 சீட் மட்டுமே. கடைசியில் என்னை தான் கழற்றி விட்டார்கள். எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன். நான் ஜனாதிபதியானதும்விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்று தருமாறு கேட்டுகொண்டேன்.6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இருந்தாலும் என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்