பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!!
Posts
Showing posts from January 26, 2015
- Get link
- X
- Other Apps
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு 'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநில தலைவர் மணிவாசகன் கூறியதாவது:கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் தேர்வுத்துறை இயக்குனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கான முன்மொழிவுகளை தயார் செய்து, அரசுக்கு அனுப்ப, தேர்வுத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுப்பணிகளுக்கான உழைப்பூதியம் உயர்த்தப்படாவிட்டால், ப...