போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்.தேர்வு முறையிலும் மாற்றம் அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை கடந்த 17.11.2014 அன்று வெளியானது.அதன்படி, 95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5மதிப்பெண்ணுக்கு புதிய முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது, கூடுதல் கல்வித்தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளிகளில் பணியாற்றிய அனு பவம் இருப்பின் அதற்கு 1 மதிப் பெண், தனியார் பள்ளி அனுபவம் என்றால் அரை மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்) சாதனை போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் வழங்கப...
Posts
Showing posts from January 24, 2015
- Get link
- X
- Other Apps
முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத உதவி பேராசிரியர் நியமனம்.அரைகுறையாக நிற்கும் தேர்வு பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை. பணிக்கான தேர்வு பட்டியல் அரைகுறையாக நிற்கிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று 2011-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை 13.9.2011 அன்று வெளியானது. இதைத் தொடர்ந்து, 1,093 உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.5.2013 அன்று வெளியிட்டது. உயர்கல்வித் தகுதி (பிஎச்.டி.), பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது.உயர்கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கான மதிப்பெண்படி “ஒரு காலியிடத்துக்கு5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்ம...