Posts

Showing posts from January 21, 2015
டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1: அதிகாரிகள் நியமன விவகாரம்: விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த உத்தரவு டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் 83 பேர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அதிகாரிகளாக உள்ள 83 பேரின் விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை இரண்டு வாரத்தில் யுபிஎஸ்சிக்கு அளிக்க வேண்டும். யுபிஎஸ்சி திருத்தப்பட்ட விடைத்தாள்களை இரண்டு மாதத்தில் திருத்தி, நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பின்னணி: 2000-2001ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட 83 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை தொடக்கத்தில் உறுதி செய்தது. ஆனால் அதன் பிறகு, ப...
TET-2013: 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்-TRB வசுந்தராதேவி தகவல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012–2013–ல் நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14–ந்தேதி கடைசி தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்...
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களின் முன்பதிவுக் கும், முன் உரிமைக்கும் முழுமையான அங்கீகாரம் இல்லாமல் போகிறது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் பெரும் பயன் எதுவும் இல்லையோ என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தமிழ் நாட்டில் சுமார் 94 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டு காலம் வேலை இல்லாமல் காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணி இடங் களை தவிர பிற பணி இடங் களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல்பெற்று, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆணையைப் பெற முயற்சிக்க வேண்டும். அதே போல் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்க...
TET Certificate: - 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளையின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும். - ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி 'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.