Posts

Showing posts from January 20, 2015
COURT TET NEWS: உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம் உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம் எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ... பின்பு அரசு மேலும் தனியாக ஒரு சர்வீஸ் நோட்டீஸ் அளிக்கவும் வழக்கின் வாதங்களை மார்ச் 23ம் தேதிக்குள் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாம் மேலும் நான்கு வாரங்களுக்கு பிறகு வழக்கு வாதத்திற்கு வரும் என திரு லஜபதிராய் ஐயாவிடம் வழக்கு பதிந்துள்ள நண்பர் ஒருவர் கூறினார்... Thanks to www.pallikudam.com
பின்னடைவு காலிப் பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், கவனிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. இதில், ஆசிரியர் பணியிடங்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக 1,107 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவ...
பின்னடைவு காலிப் பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், கவனிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. இதில், ஆசிரியர் பணியிடங்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக 1,107 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு ...
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம் சென்னை உயர் நீதின்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்துள்ள சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்று சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தச் சான்றிதழ்களை சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், இப்போது அவர்கள் தேர்வு எழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை ஏற்கெனவே பதிவிறக்கம் செ...