கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை: மாணவர் சேர்க்கை குறையும் என, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் -என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. பல திட்டங்கள்: தரமான ஆசிரியர்களை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. . இதன் ஒரு பகுதியாக, கல்வியியல் படிப்புகளுக்கான கால அளவை மாற்றியும், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றில் புதிய விதிமுறைகளை வகுத்தும், என்.சி.டி.இ., அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான காலம், இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது;கல்லூரிகளில் இடவசதி, ஆசிரியர் எண்ணிக்கையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகளை, பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் அறிவித்தது. அடுத்த கல்வியாண்டு, ஜூனில் துவங்குகிறது. இதற்கான அனைத்து வசதிகள...
Posts
Showing posts from January 18, 2015