Teachers Recruitment News வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
Posts
Showing posts from January 15, 2015
- Get link
- X
- Other Apps
டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதில் பெரும்பாலான தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளாத ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் 150க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று, இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள், உரிய ஆதாரத்தினை காண்பித்து, வரும் 19ம் தேதி முதல் பிப்., 14ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி: கூடுதல் கல்வித்தகுதிக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல்கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணி மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் வாசுமதி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் ஸ்லெட், நெட் போன்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று டாக்டர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. கணினி அறிவியலில் எம்.எஸ்சி., எம்.பில் படித்து ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ள நான், கடந்த 200