தமிழகத்தில், நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2 லட்சம் பேர் எழுதுகிறார்கள் 2 லட்சம் பேர் எழுதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சமர்பிக்க கடந்த நவம்பர் 26-ந்தேதி கடைசி நாள். 2 லட்சம் பேர் எழுதுகிறார்கள் 2 லட்சத்து 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தேர்வுகள் 499 மையங்களில் நடக்கிறது. சென்னையில் மட்டும் 34 மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவோர்கள் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த தேர்வை செம்மையாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடக்கும்போது தேர்வு அறைகள் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்...
Posts
Showing posts from January 9, 2015