டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும்முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாகமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை 400 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' கல்வித் துறையை கலங்க வைத்துள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர...
Posts
Showing posts from January 8, 2015