Posts

Showing posts from January 7, 2015
பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்காக 1,093 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2013-ஆம் ஆண்டுமே மாதம் வெளியிடப்பட்டது.இந்தப் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. . கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணலுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.நேர்காணல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை பல்வேறுகட்டங்களாக நடைபெற்றது. இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடுவது த
உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும். தற்போதைய நிலைப்படி 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு) இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே. Thanks to vijayakumar chennai
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.50 லட்சம் அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக 1.50 லட்சத்துக்கும்அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துள்ளனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு சனிக்கிழமை (ஜன.10) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வுக்காக 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதுவரை 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் உடனடியாக தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது: இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மையங்கள் பெரும்பாலும்