Posts

Showing posts from January 6, 2015
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலைமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர். இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்மு...
TNTET :2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் தற்பொழுது Print out எடுக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியானது 19.01.2015 முதல் 14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை. விழுப்புரம்: மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, 23 மையங்களில் நடக்கிறது. இதில், 8 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார். தேர்வு எழுதுவோர், எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மொபைல் போன் தேர்வு மையத்திற்கு கொண்டு வர அனுமதிக்கப்படாது எனவும் கலெக்டர் தெரிவித்தார். சி.இ.ஓ., மார்ஸ், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீத்தாராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், தனமணி, பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முறைகேட்டை தடுக்க டி.ஆர்.பி., முடிவு: தேர்வர் முன் விடைத்தாள் கட்டுக்கு 'சீல்' முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், முறைகேட்டை தடுக்க, விடைத்தாள்கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், 'சீல்' வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது. டி.ஆர்.பி., அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 10ம் தேதி, மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வை நடத்துகிறது. சில லட்சம் பேர், இந்த தேர்வை எழுத உள்ளனர்.தேர்வு நடைமுறைகளில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. அதன்படி இந்த தேர்வில், தேர்வு அறையில், மொத்தமாக சேகரிக்கப்படும் விடைத்தாள்களை, ஒரு உறையில் போட்டு, தேர்வர் முன்னிலையில் அதை, 'சீல்' வைக்கவும், இது தொடர்பாக, இரு தேர்வர்களிடம் கையெழுத்து பெறும் நடைமுறையையும் அமல்படுத்துகிறது. இது குறித்து, மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (ஆப்ட...