யாருக்கு வாக்களித்தோம் உடனே தெரிந்து கொள்ளலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

தமிழகத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் 'யாருக்கு வாக்களித் தோம்,' என்பதை வாக்காளர்கள் உடனே தெரிந்து கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கே வாக்குகள் பதிவு ஆவதாக, ஒவ்வொரு தேர்தலில் போதும் சில அரசியல் தலைவர்கள் சர்ச்சை எழுப்புகின்றனர். இதனால் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டுமென, வலியுறுத்தினர். இதை தவிர்க்கும் வகையில், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வி.வி.,பேட் இயந்திரம் பொருத்தப்படும். வாக்காளர் வாக்களித்தவுடன் வி.வி.,பேட் இயந்திரத்தில் இருந்து வாக்காளித்த சின்னம், வேட்பாளர் பெயர் அடங்கிய அச்சிடப்பட்ட பேப்பர் வெளியே வரும். பின் சிறிது நேரத்தில் அந்த பேப்பர் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட பெட்டிக்குள் சென்றுவிடும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog