பிஎச்.டி., படிக்க தகுதித்தேர்வு

மத்திய கல்வி நிறுவனங்களில், இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில், பிஎச்.டி., படிப்பில் சேர்வதற்கான, 'ஜெஸ்ட்' தேசியத் தகுதித் தேர்வை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலுள்ள, இந்திய கணித அறிவியல் கல்வி நிறுவனம் உட்பட, நாட்டிலுள்ள, 20 உயர் கல்வி அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் இயற்பியல், கணிதம், நியூரோ சயின்ஸ் பிரிவுகளில், பிஎச்.டி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

'ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்' என்ற இந்த ஜெஸ்ட் தேர்வு, இந்த முறை, பஞ்சாப் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி 21ல், நாடு முழுவதும், பல தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.

வரும், 5 முதல், டிசம்பர் 10ம் தேதி வரை, https://www.jest.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog