ஆசிரியர்கள் வராமல் பள்ளிகள் இயங்கின: 75 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும். பள்ளிகளில் சைக்கிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே இதற்காக பள்ளிகள்தோறும் தனி அலுவலர் நியமிக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ அமைப்பினர் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிக்கு வராத ஆசிரியர்கள்:நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2000 ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் பள்ளிகள் மூடப்படாமல், சத்துணவு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என போராட்டத்தில் பங்கேற்காத ஒன்றிரண்டு ஆசிரியர்களை கொண்டு இயக்கப்பட்டன.

நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுவதற்கு மைக், ஸ்பீக்கர் போன்றவைக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவற்றை கொண்டு வந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். ஆசிரியர் சங்கத்தினர் எச்சரிக்கை :எங்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நாங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஆசிரியர்கள் கோரிக்கை என்ன ?
*பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்
*ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும்
*தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க வேண்டும்
* கடந்த, 2004 முதல், 2006 வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்
*இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, தர ஊதியத்துடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்
*தொடக்கப் பள்ளிகளைமூடுவதை கைவிட வேண்டும். இவை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது.

Comments

Popular posts from this blog