போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்-விரைவில் அறிவிப்பு
போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளி களில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறி வித்துள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறையின் 2015-16-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணிக்கு சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிக் கல்வித்துறை கடந்த 17.11.2014 அன்று அரசாணை வெளியிட்டது.பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மாநகராட்சிப் பள்ளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஆகியவை 1,188 சிறப் பாசிரியர்களை தேர்வுசெய்ய தேவைப்பட்டியல்களை சமர்ப்பித் துள்ளன.
சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment