பீகார் : ஆசிரியர் தகுதி தேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வி
பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது. இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறை தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3 ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தார்.
மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog