வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டு பணியை இழந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்; தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்று 2014 ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வெய்ட்டேஜ் என்னும் முறையினாலும் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வினாலும் பாதிக்கப்பட்டு பணிநியமனத்தை இழந்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலப்பொருளாளர் பி.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்; படி உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு மனு எழுதும் நிகழ்ச்சியாக காலை 10மணியளவில் சுமார் 10க்கும மேற்பட்ட ஆசிரியர்கள் மனு அனுப்பினர் மேலும் நூற்றுக்கணக்கானோர் அனுப்பி வருகின்றனர்.....

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள 80 நபர்கள் மட்டுமில்லாமல் தாங்களும் தங்களைப்போன்று ஒவ்வொருவரும் மிகுந்த மனவேதனையும் பணிநியமனமும் பாதிக்கப்பட்டோம் மேலும் இனிவரும் ஆசிரியர் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர் ஆகவே வெய்ட்டேஜின் மீதும் 2013ம் தமிழ்நாடு ஆசிரியர் பணிநியமனங்கள் மீதும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் படி மனுவின் முலமாக வேண்டிக்கொண்டனர்...


Comments

Popular posts from this blog