பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
பள்ளிக் கல்வித்துறை இ,யக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்வையற்றோரை குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என அரசு பதில் அளித்துள்ளது. பார்வையற்றோரையும் சாதாரண மனிதர்களாக பார்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பார்வையற்றோரை நியமிக்காதது ஏன்? - இது குறித்து சபீதா விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி சபீதா நேரில் ஆஜராகவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments
Post a Comment