S.I OF POLICE RECRUITMENT NOTIFICATION | காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது.

காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இந்திய குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 23-ஆம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறும். 984 காலிப் பணியிடங்கள், 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு (காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதார்களைக் கொண்டு நிரப்பப்படும்) இந்தத் தேர்வு நடைபெறும்.

இந்த காலிப் பணியிடங்களில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் காவல் துறைக்கு 20 சதவீதம், விளையாட்டுத் துறைக்கு 10 சதவீதம், சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீடு 10 சதவீதமும் ஆகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியின்போது 20 வயது நிறைவு பெற்றவராகவும், 28 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும். தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு, வயது உச்ச வரம்பு தளர்வு, தகுதிகள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், நேர்காணல் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog