தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்துள்ளதால் முது கலை ஆசிரியர் பணி தேர்வை டிஆர்பி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் காலியாகின்றன. இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் பிற கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். பட்ட தாரி ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் தகுதி தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 2013ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக பணி நியமனம் கடந்த ஆண்டு இறுதிவரை நீடித்தது. இதனால் கடந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள 1,807 ஆசி ரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் 7ம் தேதி அறிவிப்பு வெளியிட் டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 10ம் தேதி நடத்தப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதினர். விடைத் தாள் வேகமாக திருத்தப் பட்டு கடந்த 6ம் தேதி முடி வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஒரு மாதத்திற்குள் ரிசல்ட் வெளியிடப்பட்டது. தகுதியானவர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட னர்.
இவர்களுக்கு கடந்த 16ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. தேர்வான புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணி இம்மாதத்திற்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிட எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஓய்வு பெறுபவர்களை கணக்கில் கொள்ளும்போது வரும் கல்வி ஆண்டு தொடங்கும் முன்பு இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. மேலும், தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டிலும் கூடுதலாக 100 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர வாய்ப்பு உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப மீண்டும் தகுதி தேர்வை டிஆர்பி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வேலையின்றி காத்திருக்கும் முதுநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Comments
Post a Comment