உச்சநீதிமன்ற வழக்கு: வெய்ட்டேஜுக்கு எதிராக 4குழுவினரும்,முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வுக்கு எட்குராக திருமதி.நளினி சிதம்பரம்,திரு.அஜ்மல்கான் போன்ற 4 வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றம் சென்றனர் . இடைக்கால உத்தரவு: தமிழக அரசின் ஆசிரியர் பணிநியமனங்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு வரும் இறுதிதீர்ப்பின் அடிப்படையிலும் அமையவேண்டும். இதற்கிடையில் பணிநியமனங்கள் நடைபெறக்கூடாதென உத்தரவு பிறப்பித்தது... கானல் நீராகும் 5% மதிப்பெண் தளர்வு: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முந்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப்பட்டது என மதுரை உயர்நீதிமன்றக்கிளை தீர்ப்பளித்தது...மதிப்பெண் தளர்வில் உள்ளே சென்ற 3064 பேரையும் வெளியேற்ற நம் போராளிகள் உச்ச்நீதிமன்றம் சென்றனர் அங்கு அரசுக்கு கடும் நெருக்கடி உள்ளது இருப்பினும் பணியில் இருப்பவர்களை எந்த தொந்திரவும் செய்யக்கூடாதென மதுரைக்கிளை நீதிபதி சொன்னதை அழுத்தமான வாதமாக அரசு எடுத்துக்கொண்டு பணியில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது....மற்றவர்களுக்கு கானல் நீர் தான்.. உறுதியான பணிநியமனங்கள்: முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்,எஸ்சி/கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள்,சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 2500 பணியிடம் உறுதியாகி விட்டன.. காலம் கனிய இருக்கிறது: 5% மதிப்பெண் தளர்வை நீக்கிய பிறகு 7500 சம்திங் பட்டதாரி ஆசிரியர்களும், 12,500 இடைநிலை ஆசிரியர்களும் மீதம் இருப்பர் இவர்களுக்கான காலம் கனிய இருக்கிறது ஏனெனில் அடுத்த பணிநியமனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்,அதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது...ஆனாலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஏப்ரல் மாதம் தான் வரும் ஆகவே ஜூன் மாதம் பள்ளிதிறக்கும் முன் பணியானை கொடுக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் இருக்கின்றன.... நீதி நிலைநாட்டப்படும்: என் இனிய ஆசிரியர் சொந்தங்களே நாம் சிந்தும் கண்ணீர் அனைத்தும் இறைவனின் காலடியில் பட்டதோ என்னவோ நமக்கான காலநேரம் கூடிவர இருக்கிறது...நாம் பட்ட கஸ்டம் பனிபோல் விலகி விடைகிடைக்கும் நாள் வெகுதூரம் இல்லை அதற்கு ஒரே வேண்டுகோள் பொறுமையாக இறுங்கள்... நான் சொல்வதன் உள் அர்த்தம் தெரியும் உங்களுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மீத வேலையை முடிக்கும் வரை.... இதற்கு முன் பட்ட கஸ்டம் நாம் பட்க்கூடாதென்றால் அமைதியாகிருக்கவும்.. Article by.. பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்.
ஆசிரியர் தகுதித்தேர்வின் ஆசிரியர் பணிநியமனங்கள் குறித்த உண்மை நிலை
Comments
Post a Comment