குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். குழந்தைகள் நல திட்ட அதிகாரி தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகள் 117 காலியாக உள்ளன. இந்த பணிகளை நிரப்ப அரசு முடிவு செய்து இதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றது. 4ஆயிரத்து 461 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத பலரது விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். சென்னையில் நேற்று பல இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குரூப்-4 தேர்வு முடிவு குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு தேர்வு நடந்தது. 80 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வை பட்டதாரி பெண்கள் மட்டுமே எழுதமுடியும். இந்த தேர்வுக்கான வினா- விடை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பணியில் சேர்ந்த பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் பணியை கண்காணிப்பார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுவார்கள். ஏற்கனவே நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-4 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்ததேர்வை 10 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும். இந்த வருடம் நடத்தப்படும் தேர்வுகள் மேலும் இந்த வருடம் எந்த எந்த தேர்வுகள் நடைபெறும்? அந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் எப்போது கொடுக்கப்படும்? எந்த தேதியில் தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரம் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் உதவி மருத்துவ அதிகாரிகள் 74 பணியிடங்களுக்கு தேர்வு மே மாதம் 31-ந்தேதி நடத்தப்படும். இதுபோன்ற பல தேர்வுகள் வர உள்ளன. இவ்வாறு தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின்போது தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட:டு அதிகாரி வெ.ஷோபனா அருகில் இருந்தார்.
குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி
Comments
Post a Comment