நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
கலக்கத்துக்கு காரணம் இந்த ஆண்டு PG TRB தேர்வில் தான் முதன்முதலாக தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதே.ஆம். கடந்த ஆண்டு வரை PG தேர்வெழுதிய ஒரு தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி கட்ஆப் நிர்ணயம் செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கட்ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவார்கள். குறைந்தபட்ச மதிப்பெண் என்று எதுவும் இல்லை .
ஆனால் இந்த ஆண்டு முதன்முறையாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.BC, MBC பிரிவினர் மொத்த மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும் (அதாவது 75 மதிப்பெண் ) SC,ST பிரிவினர் 40% மதிப்பெண்ணும் (அதாவது 60 மதிப்பெண்ணும் பெற்றால் மட்டுமே தகுதி மதிப்பெண்ணை உடையவர்களாக கருதப்படுவர்.உடனே 75 மதிப்பெண் பெற்ற BC, MBC தேர்வர்கள் அனைவரும் C.V க்கு அழைக்கப்படுவார்கள் என தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.
பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே C.V க்கு அழைக்கப்படுவார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .இதேபோல் TNPSC கூட குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 ஐ நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களை ஃபெயில் ஆனவர்களாகவே கருத வேண்டியுள்ளது . வினாத்தாள்கள் அனைத்தும் கடினமானதாக வேறு இருந்ததால் ஃபெயில் ஆகிவிடுவோமோ என்கிற அச்சமும் சிலருக்கு வரத்தொடங்கிவிட்டது என்பதே உண்மை.
-விடியல் வேலூர்
Comments
Post a Comment