பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல்

அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்காக 1,093 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2013-ஆம் ஆண்டுமே மாதம் வெளியிடப்பட்டது.இந்தப் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. .

கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணலுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.நேர்காணல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை பல்வேறுகட்டங்களாக நடைபெற்றது.

இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:உதவிப் பேராசிரியர் நியமனத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல் சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கப்படும் எந்தவொரு பணியாளர் தேர்வு அமைப்பும்இதுவரை செய்யாத வகையில், இந்தப் பணி நியமனத்துக்கான நேர்காணல்கள் முடிந்ததும் உடனுக்குடன் தேர்வர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதன்மூலம், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.பெரும்பாலும் அடுத்த மாதத்தில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog