முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை.

விழுப்புரம்: மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, 23 மையங்களில் நடக்கிறது. இதில், 8 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

தேர்வு எழுதுவோர், எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மொபைல் போன் தேர்வு மையத்திற்கு கொண்டு வர அனுமதிக்கப்படாது எனவும் கலெக்டர் தெரிவித்தார். சி.இ.ஓ., மார்ஸ், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீத்தாராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், தனமணி, பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog