மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜன.,10ல் நடக்கும் இத்தேர்வை மதுரையில் 8326 பேர் எழுதுகின்றனர். இதற்காக 19 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதன்முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு எண், பெயர் உட்பட விவரங்கள் குறிக்கும் கம்ப்யூட்டர் ஒ.எம்.ஆர்., சீட்டில் (விடைகள் இதில் தான் குறிப்பிட வேண்டும்) தேர்வர்களின் போட்டோ இடம் பெற்றுள்ளது. 'ஹால் டிக்கெட்'டில் இடம் பெற்ற போட்டோவும், ஒ.எம்.ஆர்., சீட்டின் போட்டோக்களையும் ஒப்பிட்டு பார்க்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 8326 பேரின் ஒ.எம்.ஆர்., சீட்டுகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
Comments
Post a Comment