மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை. பணிக்கான தேர்வு பட்டியல் அரைகுறையாக நிற்கிறது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று 2011-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை 13.9.2011 அன்று வெளியானது. இதைத் தொடர்ந்து, 1,093 உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.5.2013 அன்று வெளியிட்டது.
உயர்கல்வித் தகுதி (பிஎச்.டி.), பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது.உயர்கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கான மதிப்பெண்படி “ஒரு காலியிடத்துக்கு5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு ஏறத் தாழ 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற டிசம்பர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.இதையடுத்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவர வியல், விலங்கியல் உட்பட குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு பட்டியல் வெளி யிடப்பட்டது.பொருளாதாரம், புவியியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங் களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி மதிப்பெண் விவரம் டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இன்னும் தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. எனவே, தேர்வு பட்டியலே அரைகுறையாகநிற்கிறது.முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உதவி பேராசிரியர் நியமனம்முடிவடையாததால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இதற்கிடையே,2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் வந்துவிட்டன.2012-13-ம் ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த ஆண்டுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ? என்று பிஎச்.டி. பட்டதாரிகளும், ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை மற்றும் எம்.ஃபில். பட்டதாரிகளும் கவலைப்படுகிறார்கள்.
பள்ளி ஆசிரியர் நியமனம் போன்று கல்லூரி உதவி பேராசிரியர்களையும் முன்பு போல போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய்ய வேண்டும் என்பது அவர்களின் தலையாக கோரிக்கை.தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இந்த ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ?
Comments
Post a Comment