Posts

Showing posts from December 28, 2014
TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.
அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு? வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். கிரேடு முறை: கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இத்திட்டப்படி, சமச்சீர் கல்வித்திட்ட பாடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும், அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அக மதிப்பெண்படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து, மாணவர்களுக்கு, 'கிரேடு' முறை பின்பற்றப்படுகிறது. முப்பருவ திட்டம் அமலுக்கு வரும் ப
உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருளாதாரம், புவியி யல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உடற்கல்வி உள்பட 10 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.