Posts

Showing posts from December 27, 2014
பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு அரசு பள்ளி கல்வித்துறை துணைசெயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாவட்டஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை துணைசெயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது
TET 2015 -ஏப்ரல் மாதத்தில் நடைபெறுமா? ஆண்டுக்கு அதிக அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு தகுதி தேர்வை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது அதிக அளவிலான தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த தகுதி தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் கற்பித்தலில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிலாவது ஆசிரியர்களை நியமனம் செய்யும் வகையில் ஏப்ரல் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அதனை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களைவிட தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 4,800 குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. கேந்திரிய வித்யாலயம் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி அதிகம். மாநில அரசு பள்ளி இடைநிலை ஆசிர...
"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்' ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைஉடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே, தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிகிறது. தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதுடன், உடனடியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய...