Posts

Showing posts from December 26, 2014
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதியடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 21ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, குரூப் 4 தேர்வுக¢கான உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள்இணையதளத்தில் விடைகளை சரிபார்த்துக்கொள்ளலாம்...
குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது. இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம். தவிரவும், ’அரைக்காசு என்றாலும் அரசு வேலை’ என்ற பழைய தமிழ்பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது. இத்தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும். இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும். இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு 10ம் வகுப்பு த...