மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜன.8-க்குள் விண்ணப்பிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், இந்திய திபெத்திய பள்ளிகள் (சிபிஎஸ்இ பாடத்திட்டம்) மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். சி-டெட் தேர்வை மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. அடுத்த ஆண்டுக்கான சி-டெட் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) அன்றைய தினம் பிற்பகலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-2) காலையிலும் நடத்தப் படுகிறது. இத்தேர்வுக்கு ஜனவரி 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( www.ctet.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை மற்றும் தேர்வு குறித்த விரிவான தகவல்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பிப்ரவரி 2-ம் தேத...
Posts
Showing posts from December 23, 2014