Posts

Showing posts from December 22, 2014
TNPSC Group I 15 நாட்களில் அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும், 244 தேர்வு மையங்களில், 4,448 தேர்வு அறைகளில் நேற்று நடந்தது. வீடியோவில் பதிவு: இத்தேர்வில், 12.72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 84 சதவீதம் பேர், அதாவது, 10.43 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது; இணையதளம் வழியாக கண்காணிக்கப்பட்டது. சென்னை, எழும்பூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:குரூப் - 4 தேர்வு முடிவுகள், இரண்டரை மாதங்களில் வெளியிடப்படும். குர
TET-ராமர் சுடலைமணி வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராமர் சுடலைமணி வழக்கு வரவில்லை.நாளை வரும் என்றும் வந்தாலும் அரசு தரப்பில் ஆஜராக தயாரில்லை என்றும் மதுரை தகவல்கள் கூறுகின்றன. எனவே ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிவழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த ஜி.நாகராஜன், நெல்லை மாவட்டம், மடத்தூரை சேர்ந்த சித்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் பிறகு தேர்வு நடைபெறவில்லை. கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:இதே கோரிக்கையுடன் வந்த பல ஆசிரியர்களுக்கு இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து அவர்கள் மேலும் 5 ஆண்டுகள
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கல்யாணி(வயது 41). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- நான், 1993-ம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்பையும், 1995-ம் ஆண்டு எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பையும் முடித்தேன். பி.எஸ்சி. படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. எம்.எஸ்சி. படிப்பை 7.7.1995 அன்று சென்னையில் உள்ள தொழில் கல்வி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதன் பின்பு, பி.எட். படிப்பை முடித்து 9.1.1997 அன்று பதிவு செய்துள்ளேன். எம்.பில். படிப்பை 2005-ம் ஆண்டிலும், ஆராய்ச்சி படிப்பை(பி.எச்.டி.) 2013-ம் ஆண்டிலும் முடித்தேன். பி.எஸ்சி., கணினி அ