Posts

Showing posts from December 21, 2014
குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் இளநிலை உதவியாளர் பதவி, தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்–4 தேர்வு இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,448 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மட்டும் 263 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இத்தேர்வு நடந்தது. எழும்பூரில் தேர்வு மையங்களை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறியபோது, இன்று நடைபெறும் குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும். இன்றைய தேர்வில் சுமார் 80 சதவீதம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் விடைத்தாள் பதில்கள் 1 வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பயிற்சிக்கு அழைப்பு சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ. அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18ம் தேதி முதல் நடக்கிறது. பயிற்சி வகுப்புகள் வரும் எட்டாம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடக்கும். ஆகவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்த கொள்ள விரும்பினால் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள் தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழுவதும் 244 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன. இந்தத் தொகுதியில் 4 1, 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. 244 இடங்களில் மையங்கள்: குரூப் 4 தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மாநிலத்தில் 244 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு மையம் என்ற அளவில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போன்ற பெ