உயர்கல்வி மறுசீரமைப்பு-மாநில அரசுகளுடன் ஜனவரியில் ஆலோசனை: ஸ்மிருதி இராணி நாட்டில் உயர்கல்வி முறையை மறுசீரமைப்பது குறித்து வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மக்களவையில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார். இது தொடர்பாக கேள்வி நேரத்தின் உயர்கல்வியை மறுசீரமைப்பது குறித்து பேசிய ஸ்மிதி இராணி கூறியதாவது:, மாநில கல்வி அமைச்சர்களுடனும், செயலாளர்களுடன் வரும் ஜனவரி 6ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். அரசு, உயர் கல்வியை மறுசீரமைப்பு தொடர்பாக யூஜிசி (Uiversity Grants Commission) மற்றும் ஏஐசிடியில்(All India Council for Technical Education) குழு அமைத்துள்ளது. "தரமான கல்வி, எளிதில் கிடைக்கும் முயற்சியாக யூஜிசி, நாட்டில் உயர்கல்வி முறையை ஓழுங்குபடுத்தும் அதேவேளையில், யூஜிசியை வலுப்படுத்தி, சீரமைத்தால் அது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை அரசு உணர்ந்துள்ளது" என்றார். மேலும் ஏஐடிசிடிசி குழு அளித்த அறிக்கையில், நாட்டில் பல பல்கலைக்கழங்களில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மத்...
Posts
Showing posts from December 17, 2014
- Get link
- X
- Other Apps
10-ஆம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை? அடுத்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறைக்கு, இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது. இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு மதிப்பெண்ணாக வழங்கப்படும். 2014-15-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிலும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படு...