ஆசிரியர் பணியிட மாறுதலில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்! தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பல நூறு கோடி ரூபாய் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இடத்தின் தூரத்தை பொறுத்து ரூ.4 லட்சம் முதல், ரூ.7 லட்சம் வரை கைமாறியுள்ளது. இதில் ரூ. 500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெயலலிதா சிறையில் இருக்கும்போது ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தொழில் அதிபர் ரூ.10 கோடி முன்பணம் கொடுத்துவிட்டு அவர் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அம்மாநில முதல்வர் சவுதாலா மற்றும் அவரின் இரு மகன்...
Posts
Showing posts from December 16, 2014
- Get link
- X
- Other Apps
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்திலிருந்து இந்த அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தாலும், விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை ஏற்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்