Posts

Showing posts from December 15, 2014
PG-TRB: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி - மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியுடன், பி.எட்., முடித்து பதிவு செய்துள்ள அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் டிச.,31 வரை பரிந்துரை செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 01.07.2014 அன்று 57 வயதுக்குள். இத்தகுதி, பதிவு மூப்பு உள்ள மனுதாரர்கள் பதிவு விபரத்தை டிச.,16 அன்று காலை 11 மணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு கடந்த ஜூன் மாதம் தமிழ் நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் காணலாம்.
2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக்காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்உச்ச. நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது இந்த. வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார் இதில். ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியி
VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/