Posts

Showing posts from December 12, 2014
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 4தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் www.tnpsc.govt.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 4,21,486 பேரில் 4,11,339 பேர் தேர்வில் பங்கேற்றனர். மதிப்பெண் படி பொது மற்றும் வகுப்பு வரியாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு 'கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார். கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர். சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பணப்பலன், பணி மூப்பு உட்பட பல காரணங்களுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை உட்பட 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் உள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : மார்ச் 7-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு அதாவது 7.3.2015-க்குள் tnvelaivaaippu.gov.inஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.